அனுமன் லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல நீங்கள் தான் எங்கள் உயிரை காப்பாற்ற வேண்டும்! மோடியிடம் கெஞ்சிய பிரேசில் அதிபர்!
Brazil pm request to modi
அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என ராமாயணத்தை மேற்கோள்காட்டி, பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா உலக நாடுகளில் அதிகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14க்கு வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் வழங்க இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. இதனால் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதனை ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் 25ம் தேதி மத்திய அரசு அதிரடியாக தடைவிதித்து.
இந்நிலையில், ராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என எழுதியுள்ளார்.