அடப்பாவமே.. மாஸாக என்ட்ரி கொடுக்க நினைத்த மணமக்கள்! ஆனா என்னாச்சு பார்த்தீங்களா!! ஷாக் வீடியோ!!
அடப்பாவமே..இப்படியாகிருச்சே! மாஸாக என்ட்ரி கொடுக்க நினைத்த மணமக்கள்! ஆனா என்னாச்சு பார்த்தீங்களா!! ஷாக் வீடியோ!!
தற்காலத்தில் திருமணம் என்றாலே மறக்கமுடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் வித்தியாசமான பல செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களது திருமணத்தை மிகவும் வித்தியாசமாக, பார்ப்போர் அசரும் வகையில் நடத்த வேண்டும் என்பதில் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ராய்ப்பூரில் திருமணம் ஒன்றில் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக மணமக்கள் மேற்கொண்ட செயல் இறுதியில் அவர்களை மருத்துவமனைக்கு செல்லும் நிலைக்கு கொண்டு வந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிரம்மாண்ட மேடையில், நடன கலைஞர்கள் அசத்தலாக நடனமாட, வான வேடிக்கையுடன் மணமக்கள் அந்தரத்தில் ஊஞ்சலில் தோன்றினர்.
பின்னர் ஊஞ்சல் மெல்ல மெல்ல உயரே சென்றநிலையில் திடீரென அறுந்து விழுந்துள்ளது. இந்த நிலையில் ஊஞ்சலில் நின்றுகொண்டிருந்த மணமக்கள் 12 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு பெருமளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு அவர்களது திருமண சடங்குகள் அனைத்தும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.