ஊரடங்கால் தள்ளிப்போன திருமணம்..! மணமகனின் வீட்டிற்கு 80 கி.மீ நடந்தே சென்ற மணமகள்..!
Bride walk 80 KM to reach Groom house to get marry
கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளிப்போன நிலையில், மணமகள் 80 கி.மீ. நடந்தே சென்று மணமகன் வீட்டில் தஞ்சமடைந்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது.
ஊரடங்கு காரணமாக முன்னதாகவே முடிவு செய்யப்பட்ட பல திருமணங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சில திருமணங்கள் எளிமையான முறையில் நடைபெறுகிறது. இன்னும் சில திருமணங்கள் மிகவும் வித்தியாசமாக வீடியோ காலில் நடைபெற்றுகிறது.
இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த மணமகள் கோல்டி என்பவருக்கும், கன்னாஜ் பகுதியை சேர்ந்த மணமகன் வீரேந்திர குமார் என்பவருக்கும் மே மாதம் 4 ஆம் தேதி திருமணம் செய்வதாய் பேசி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு என்பதால் இவர்கள் திருமணம் குறித்த தேதியில் நடைபெறவில்லை.
இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த மணமகள் கோல்டி, மணமகனின் வீட்டை நோக்கி நடக்க தொடங்கியுள்ளார். சுமார் 80 கி.மீ தூரம் நடந்து சென்று மணமகனின் வீட்டை அடைந்துள்ளார் கோல்டி. வீட்டு வாசலில் மணமகள் நிற்பதை பார்த்த மாப்பிள்ளையின் குடும்பத்தார் உடனே இதுகுறித்து மணமகளின் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும், ஊரடங்கு முடியும்வரை காத்திருக்குமாறு மணமகளுக்கு அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் அதை ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை என்பதால் உடனே திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.