எல்லை பாதுகாப்பு படை தலைமை காவலருக்கு கொரோனா! சீல் வைக்கப்பட்ட தலைமையகம்!
Bsf officr affected by corona
சீனாவின் உகான் நகரில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் பரவி வந்த இந்த வைரஸ் ஆனது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பரவிய சில நாட்களில் இருந்தே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவிற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் உலகின் பல நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மட்டுமே தாக்கும் என கூறி வந்த நிலையில் தற்போது, இந்தியாவில் பெரிய துணை ராணுவ படையான சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
டெல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைமையகத்தில் அதிகாரி ஒருவரின் செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்ததால், தலைமையகம் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதற்கிடையே மற்ற ராணுவ பிரிவினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இந்த நிலையில் டெல்லி லோதி சாலையில் உள்ள எல்லை பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தலைமையகத்தில்
8 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தின் 2-வது மாடியில் அவர் பணியாற்றி வருகிறார். இதனையடுத்து கட்டிடத்தின் அனைத்து தளங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், தலைமையகத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளம் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை பி.எஸ்.எப். வீரர்களில் 50-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.