எல்லாம் அய்யப்பன் செயலாம்! பீதியை கிளப்பும் ரஹானா பாத்திமா!
BSNL transferred rehana fathima to an another branch
கேரளாவில் உள்ள சபரிமலை கோவில் மிகவும் பிரபலமானது. கார்த்திகை மாதம் ஆனாலே உலகி பல்வேறு பகுதிகளில் இருந்து மாலையிட்டு சுவாமி அய்யப்பனை தரிசிப்பது வழக்கம். ஆனால் 10 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் அல்லது பெண்கள் அய்யப்பனை தரிசிக்க அனுமதி இல்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிநி அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த உத்தரவை செயல்படுத்த கேரள அரசு கடும் முயற்சி எடுத்தது. இதற்காக அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாதவி என்ற பெண் முதன்முதலில் தனது குழந்தைகளுடன் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்தார். ஆனால் ஏராளமான பக்தர்கள் அவரது காலில் விழுந்து மன்றாடியதால் அவர் திரும்பச் சென்றார். இதே போல் பல பெண்கள் சன்னதிக்குள் நுழைய முயன்று முடியாமல் போனது.
இதை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கவிதா என்ற பத்திரிகையாளரும், ரஹானா ஃபாத்திமா என்ற மாடலும் அய்யப்பன் கோவிலுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் நுழைய முயன்றனர். ஆனால் பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் கேரளாவில் பம்பை பகுதியில் கலவரம் ஏற்பட்டு 144 தடை உத்தரவு போடப்பட்டது.
ஒரு இஸ்லாமிய பெண்ணான பாத்திமா எப்படி ஐயப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என எதிர்ப்புகள் கிளம்பின, கேரளாவில் உள்ள அவரது வீடும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்நிலையில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெஹானா கொச்சி போட் ஜெட் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் கிளையில் டெக்னீஷியனாகப் பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே தற்போது ரெஹானா ஃ பாத்திமாவை பிஎஸ்என்எல் நிறுவனம் டிரான்ஸ்ஃபர் செய்துள்ளது.
தற்போது போட் ஜெட்டி கிளையிலிருந்து எர்ணாகுளம் அருகே உள்ள ரவிபுரம் பகுதிக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார். சபரிமலைக்குச் சென்றதால்தான் புகார் கொடுக்கப்பட்டு அவர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார் எனக் கேரள ஊடகங்கள் தெரிவித்து வந்தன.
ஆனால், இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள ரெஹானா, ஐந்து வருடத்துக்கு முன்பே எர்ணாகுளத்தில் உள்ள எனது வீட்டின் அருகே கிளைக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டிருந்தேன். ஐந்து ஆண்டுகளாக டிரான்ஸ்ஃபர் கிடைக்காத எனக்குச் தற்போது சபரிமலைக்குச் சென்ற பின்பு உடனே கிடைத்துள்ளது என நெக்ழிச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இதெல்லாம் நான் ஐயப்பன் கோவிலுக்கு சென்றுவந்ததுனாலதான் என பாத்திமா நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். மேலும் தனக்கு பணி மாறுதல் அளித்த அதிகாரிகளுக்கு கடவுள் நல்லது மட்டுமே செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.