வீட்டிலிருந்தே வேலை செய்ய BSNL அதிரடி ஆஃபர்! ஒரு மாதம் முழுவதும் இலவச இணைய சேவை
Bsnl work@home free plan ahead of covid19
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளன. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உழியர்களின் ஒரு வருத்தம் இணைய சேவையை குறித்து தான்.
வீட்டிலிருந்ததே வேலை செய்ய அதிகமான டேட்டா தேவைப்படும். அதற்கு கட்டணமும் அதிகமாகும். இதனை நிவர்த்தி செய்யும் விதமாக மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான BSNL ஒரு மாத இலவச சேவையினை அறிவித்துள்ளது.
இந்த இலவச சேவையானது ஏற்கனவே இருக்கும் லேண்ட்லைன் ப்ராட்பாண்ட் மற்றும் பதிய வாடிக்கையாளர்களுக்கும் அளிக்கப்படும் என நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார். இதன் மூலம் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம், ஆண்லைனில் படிக்கலாம், வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆன்லைனிலே பெற்று பயனடையாலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ப்ளானிற்கு work@home என பெயரிட்டுள்ளனர். இந்த ப்ளானில் ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்ட 10 mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இந்த ப்ளானினை போன் மூலம் பேசியே பெறலாம் என்றும் அலுவலகத்திற்கு வர அவசியமில்லை என்றும் கூறியுள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பழையபடி கட்டண சேவை தொடருமாம்.