அடேங்கப்பா! தொழில் பக்தியால் இப்படியா.! புகைப்பட கலைஞரின் வீடு, மகன்களின் பெயர்களை பார்த்தீர்களா! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!
Camera man build house as shape of camera
கர்நாடக-மராட்டிய மாநில எல்லையில் அமைந்துள்ள பெலகாவி டவுனில் வசித்து வந்தவர் ரவி ஒங்கலே. 49 வயது நிறைந்த இவர் புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். மேலும் சொந்தமாக ஸ்டூடியோவும் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.
ரவி ஒங்கலேக்கு சிறுவயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்து வந்துள்ளது. மேலும் மிகுந்த ரசனையுடனே புகைப்படம் எடுப்பார். இதனால் அப்பகுதி மக்கள் அங்கு நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரவி ஒங்கலேயை புகைப்படம் எடுக்க அழைப்பர். இந்நிலையில் பெலகாவி டவுன் பகுதியில் புதிதாக வீடு கட்ட விரும்பிய அவர் தனது பணியின் மீதிருந்த ஈடுபாட்டால் தனது வீட்டையே கேமரா வடிவில் கட்ட திட்டமிட்டு, அசத்தலாக கட்டியும் முடித்துள்ளார்.
இந்த வீட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதனை கண்ட பலரும் ரவி ஒங்கலேவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், புகைப்படம் எடுக்கும் தொழிலால்தான் தற்போது நான் நல்ல நிலையில் உள்ளேன். தொழில் மீதான பக்தி மற்றும் என்னை பெரிய ஆளாக்கிய கேமராவுக்கு பெருமை சேர்க்க எண்ணியே கேமரா வடிவில் வீடு கட்ட ஆசைப்பட்டேன். இதுகுறித்து நான் கட்டிட காண்ட்ராக்டர் கூறிய நிலையில், அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.
வீடு கட்டும் பணிகள் முழுவதையும் நான் அருகிலேயே நின்று கவனித்தேன். வீட்டின் முகப்பில் லென்ஸ், பிளாஸ் பட்டன்கள் போன்ற வடிவில் வைத்துள்ளேன். எனது இந்த வீட்டை கட்டி முடிக்க எனக்கு ரூ.71 லட்சத்து 63 ஆயிரம் செலவாகியுள்ளது என கூறியுள்ளார். அதுமட்டுமன்றி தன்னை வாழ வைக்கும் கேமராவுக்கு மரியாதை செலுத்தும்வகையில் ரவி தனது மகன்கள் 3 பேருக்கும் கேனான், நிகான், எப்சான் என கேமரா நிறுவனங்களின் பெயரை சூட்டியுள்ளார். இது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.