விபத்து நடந்த ஏர் இந்தியா விமானத்தை ஓட்டியது யார் தெரியுமா..? விமானி பற்றிய பல முக்கிய தகவல்கள்..!
Captain Who Died In Kerala Plane Crash Was Decorated Ex-Air Force Pilot
துபாயில் இருந்து 191 பேருடன் இந்தியாவின் கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து விலக்கியநிலையில் விபத்துக்குளாகி இரண்டு துண்டுகளாக உடைந்து விழுந்தது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இரண்டு விமானிகளில் ஒருவர் தீபக் வசந்த் சாத்தே. இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்த 15 பேரில் இவரும் ஒருவர். இந்நிலையில் விமானி தீபக் வசந்த் சாத்தே பற்றியும், அவரது அனுபவம் குறித்தும் செய்திகள் வைரலாகிவருகிறது.
விங் கமாண்டர் சாத்தே முன்னாள் இந்திய விமானப்படை விமானி ஆவார், அவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்குச் செல்வதற்கு முன்பு ஏர் இந்தியாவுக்கான விமானங்களை ஓட்டியவர். அவர் ஒரு விருது பெற்ற சிறந்த விமானியாக இருந்துள்ளார். அவர் போயிங் 737 விமானங்களை ஓட்டுவதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்று பலராலும் வர்ணிக்கப்பட்டுள்ளார்.
அவர் மிகவும் தொழில்முறை மற்றும் 58 என்.டி.ஏ தலைவர் தங்க பதக்கம் வென்றவராவார். மேலும் அவர் ஒரு திறமையான போர் விமானி எனவும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வெளிநாட்டிலிருந்து இந்தியர்களை அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விமானம் இயங்கியுள்ளது.
விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதை மிக அதிக மழையுடன் மென்மையாய் இருந்ததாக கூறப்படும் நிலையில், விமானம் பல முறை விமான நிலையத்தை சுற்றி வந்து, டேப்லெட் ஓடுபாதையில் தரையிறங்க இரண்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த முயற்ச்சியில் ஒருபுறம் இருந்த ஆழமான பள்ளத்தில் விழுந்து இந்த விபத்து நடந்துள்ளது.