பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு.! விரைவில் கைதுசெய்யப்படுவாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!!
case filed on maniratnam for writing letter to prime minister
தமிழ் சினிமாவில் மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா என தொடங்கி சமீபத்தில் வெளிவந்த ஓகே கண்மணி, காற்று வெளியிடை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் மணிரத்னம் . இவர் அவரது படத்திற்காக ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திரா குஹா, அபர்னா சென், உள்பட 49 பிரபலங்கள் நாட்டில் நடக்கும் படுகொலைகளுக்கு எதிராக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் பீகார், உத்தர பிரதேசம், மேற்குவங்கம்,போன்ற மாநிலங்களில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த இளைஞர்களை ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட சொல்லி கும்பல் ஒன்று பெரும் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. மேலும் இந்த செயல்களில் இந்துமத அடிப்படைவாத அமைப்புகளே ஈடுபட்டுவருகிறது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பிரதமராகிய நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எழுதியுள்ளனர்.
இந்த கடிதத்தை எதிர்த்து மிஜாப்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநலவழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் மணிரத்னம் உட்பட இந்த கடிதத்தை எழுதியவர்கள் அனைவர் மீதும் பிரதமரின் மரியாதையைக் குறைக்கும் வகையில் நடந்து கொண்டது, பிரிவினையை ஊக்கப்படுத்துவது, அமைதியை சீர்குலைத்தது போன்ற குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு, தேசதுரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன