×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது சிபிஐ அலுவலகத்திலேயே சிபிஐ ரெய்டா வெளியான அதிர்ச்சி தகவல்.!

cbi office raide in delhi

Advertisement

சிபிஐ வரலாற்றிலேயே சிபிஐ தலைமையகத்தில் முதன்முறையாக சிபிஐ ரெய்டு நடந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிபிஐ சிறப்பு இயக்குனராக தற்சமயம் பதவி வகிப்பவர் ராகேஷ் அஸ்தானா. 2014ம் ஆண்டு மாமிச ஏற்றுமதியாளர் மெயின் குரேஷியா வீட்டில் நடத்திய சோதனையின் போது 3 கோடி பெற்றுக்கொண்டு முக்கிய குற்றவாளிகளை தப்பிக்க விட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு  எழுந்துள்ளது.

இந்த புகாரின் பேரில் சிபிஐ தலைமை தலைமையகமான டெல்லியில் அமைந்துள்ள இவருடைய அலுவலகங்கள் மற்றும் இவருக்கு நெருக்கமான அதிகாரிகளின் அறைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா ஆலோசனையின் பேரில் ராகேஷ் அஸ்தான மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் இந்த ஊழலுக்கு இவருக்கு உடந்தையாக இருந்த சிபிஐ அதிகாரி தேவேந்திர குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த ஊழலில் தொடர்புடைய நிறைய அதிகாரிகள்  சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் மிக உன்னதமான உயர்ந்த அமைப்பாக சிபிஐ விளங்குவதால் இது நாட்டிற்கு ஒரு இழிவான சம்பவமாக கருதப்படுகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு இந்த வாரத்திற்குள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தான பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Spark #cbi raide #delhi cbi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story