8 மாநிலங்களில் அதிரடி சோதனை.. சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 16 பேரை தூக்கியது சி.பி.ஐ.. அதிரடி சம்பவம்.!
8 மாநிலங்களில் அதிரடி சோதனை.. சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 16 பேரை தூக்கியது சி.பி.ஐ.. அதிரடி சம்பவம்.!
சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக நடந்த சோதனையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியா முழுவதும் 115 இடங்களில் சர்வதேச புலனாய்வு அமைப்பினர் சி.பி.ஐ அதிகாரிகளுடன் சேர்ந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இணையவழியில் சைபர் குற்றங்கள் செய்யும் மோசடி நபர்களுக்கு வலைவீசப்பட்டது. இவர்களின் தகவல்களை திரட்டி இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் அதிரடியாக சோதனை நடந்தது.
இன்டர்போல் அதிகாரிகள் தவிர்த்து அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சி.பி.ஐ அதிகாரிகள் சேர்ந்து ஆபரேஷன் சக்ராவை மேற்கொண்டனர். இதன்மூலமாக ராஜஸ்தான், அசாம், கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் மற்றும் அந்தமான் உட்பட 8 இந்திய மாநிலங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையின் மூலமாக சைபர் குற்றத்தை செய்த 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து ரூ.1.8 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அகமதாபாத் மற்றும் புனே நகரில் செயல்பட்ட 1 போலியான கால் சென்டர் கண்டறியப்பட்டது. கைதானவர்கள் வைத்திருந்த செல்போன், லேப்டாப், டிஜிட்டல் ஆவணமும் பறிமுதல் செய்யப்பட்டன. உலைக்களவில் சைபர் குற்றத்தால் நாளொன்றுக்கு இலட்சம் பேருக்கு 9 ஆயிரம் என்ற விகிதத்தில் பாதிக்கப்படுகின்றனர்.