ப.சிதம்பரம் எங்கே? விடாமல் துரத்தும் சிபிஐ! அவரது இல்லத்தில் ஒட்டிய நோட்டிஸ்!
CBI ride at p.chidamparam house
மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது 2007-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.
இந்த அனுமதி அளிக்கப்பட்டதில் சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில்,டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குள் நேற்று மாலை சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென நுழைந்தனர். ஆனால் வீட்டில் ப.சிதம்பரம் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்து திரும்பினர்.
ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை புரிந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்துக்குள் 3 முறை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக ப.சிதம்பரத்தின் இல்லத்திற்கு வந்துள்ளனர்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அவர் இல்லை என தெரிந்ததும் 2 மணி நேரத்திற்குள் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர். இதனால் ப.சிதமபரத்தின் இல்லத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.