இனி இவர்களுக்கெல்லாம் பாஸ்போர்ட் கிடையாது.! மத்திய அரசின் அசத்தல், அதிரடி!
central government order for passport
ஊழல் புகாரில் சிக்கிய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பாக மத்திய பணியாளர் துறை, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பணியிடை நீக்கத்தில் இருப்பவர்கள் மற்றும் ஊழல் விசாரணைக்கு ஆளாகி இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட மாட்டாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்பு, அவர்கள் மீது ஏதேனும் ஊழல் வழக்குகள் உள்ளதா எனவும், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்களா என்றும், குற்றவியல் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்களா எனவும் ஆய்வு செய்து அவர்கள் ஊழல் புகார்களில் சிக்கி இருந்தால் காவல்துறை அனுமதியை அவர்களுக்கு நிறுத்தி வைக்கலாம் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ஊழியர் இந்தியாவைவிட்டு வெளியே சென்றால், அதனால், ஏதாவது ஒரு நாட்டுடன் இந்தியாவின் நல்லுறவு பாதிக்கப்படும் என்றாலோ அவருக்கு பாஸ்போர்ட் மறுக்க அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் சட்ட விதிகளின்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மத்திய பணியாளர் துறை, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.