அதிர்ச்சி! செல்போனில் உள்ள அந்தரங்க தகவல்களை கண்காணிக்கும் மத்திய அரசு!
Central government watching your cell phone and computer
தொழில்நுட்பம் வேகமாக வளர வளர, அது சம்மந்தமான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் ஆபாச படங்கள், விடீயோக்கள் போன்றவற்றால் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொழிநுட்ப குற்றங்கள், பாலியல் தொல்லைகளை தடுக்க இந்திய அரசு ஒரு முடிவு வந்துள்ளது. அதன் முதற்கட்டம்தான் அணைத்து ஆபாச இணையதளங்களை முடக்கியது.
தற்போது அதன் அடுத்த கட்டமாக உங்களின் செல்போனில் உள்ள அந்தரங்க தகவல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் மத்திய அரசு கண்காணிக்க உள்ளது. உங்கள் தொலைபேசி, கணினி இவற்றில் உள்ள தகவல்களை கண்காணிக்க மத்திய அரசு 10 முகமமைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் உங்கள் தகவல்கள் அந்த 10 அமைப்பால் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தொழில் நுட்ப சட்டம் 2000ம் 69 (1)-ன் பிரிவின் மத்திய உள்துறை அமைச்சகம் மின்னனு மற்றும் தகவல் பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, குற்றங்கள் தடுப்பு போன்ற காரணங்களுக்காக உங்கள் தகவல்கள் நோட்டமிடப்படுகின்றன.
உங்கள் கணினி, தொலைபேசியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை பார்க்க இந்த 10 அமைப்புகளால் முடியும். மேலும், உங்களுக்கு வரும் தகவல்களை வழிமறித்து கேட்கவும், அதை அழிக்கவும், முழுமையாக கண்காணிக்கவும் இந்த அமைப்புகளால் முடியும்.
ஒருவேளை நீங்கள் இந்த 10 அமைப்பிற்கும் ஒத்துழைக்க மறுத்தால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கமுடியும் என்றும் எச்சரித்துள்ளது. எனவே உங்கள் தொலைபேசி, கணினி இவற்றில் உள்ள ஆபாசமான, சட்டத்திற்கு புறம்பான தகவல்களை உடனே அழித்து விடுவது நல்லது.