ஒமைக்ரான் டாப் 5 மாநிலங்களில் தமிழ்நாடு.. மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை.!
ஒமைக்ரான் டாப் 5 மாநிலங்களில் தமிழ்நாடு.. மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை.!
டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உட்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பாதிப்புகள் வாராவாரம் அதிகரித்து வருகிறது.
ஆசிய கண்டத்திலும் கொரோனா பாதிப்புகள் வாரத்திற்கு வாரம் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்திய அளவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 17 மாநிலங்களை பாதித்துள்ளன. இவற்றில் கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளது.
இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள 17 மாநிலத்தில் இருந்தும் 358 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 114 பேர் பூரண நலனுடன் சிகிச்சை முடித்து இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 89 % பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 61 % பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர்.
ஒமிக்ரான் தொற்று மற்றும் பண்டிகை காலத்தின் கருத்தில் கொண்டு டிச. 21 ஆம் தேதியே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தவும் மாநிலத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.