மராட்டியத்தில் விரைவில் குடியரசுத்தலைவர் ஆட்சி? - மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி.!
மராட்டியத்தில் விரைவில் குடியரசுத்தலைவர் ஆட்சி? - மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி.!
பாஜகவும் - சிவசேனாவும் ஒன்றிணைய வேண்டும், மஹாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த தெரிவித்த கருத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன் என மத்திய அமைச்சர் பேசினார்.
சிவசேனா - பாரதிய ஜனதா கட்சி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒன்றிணைந்து கடந்த சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இருகட்சிகளுக்கும் இடையே முதல்வர் பதவி பங்கீடு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து, சிவசேனா தனது கொள்கைக்கு நேரெதிராக உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்தது.
இந்த விஷயத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த பாரதிய ஜனதா கட்சி, மக்கள் வாக்களித்தது சிவசேனா - பாரதிய ஜனதா கூட்டணிக்கு தான். இருகட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வருகின்றனர். மேலும், அவ்வப்போது மாநில அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர்.
ஆட்சி அமைக்கும் போது நடந்த பிரச்சனையில், பாரதிய ஜனதா கட்சி - தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளிகளில் ஒருவரான அஜித் பவாரை தன்னுடன் இணைத்து ஆட்சியை அமைத்த நிலையில், அவர்களுக்கு மெஜாரிட்டி வராததால் ஆட்சி அமைக்கப்பட்ட நாளிலேயே அது கைவிட்டுப்போனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய காமிச்சார் ராமதாஸ் அத்வாலே, "மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சந்திரகாந்த் பாட்டீலின் கருத்துடன் நான் உடன்படுகிறேன். மகா விகாஸ் அகாடி அரசு அதற்கு செல்ல வேண்டும், இதற்கு பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி வேண்டும். இந்த இரு கட்சிகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்" என்று தெரிவித்தார்.