ஒரு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க ஆளுங்கட்சி திட்டம்?.. பரபரப்பு குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் அரசியல் புள்ளிகள்..!
ஒரு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க ஆளுங்கட்சி திட்டம்?.. பரபரப்பு குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் அரசியல் புள்ளிகள்..!
மக்களின் பணத்தை கொள்ளையடித்து வைத்துள்ள ஜெகன் மோகனை, வங்கக்கடலில் தூக்கி வீச ஆந்திர மக்கள் முடிவு செய்துவிட்டதாக சந்திரபாபு நாயுடு பேசினார்.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமையில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி செய்து வருகிறார். அவரின் ஆட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பல குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இதுகுறித்து சாலை பேரணி பிரச்சாரமும் அவர் மேற்கொண்டு வருகிறார். இன்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பொண்டுரு, விஜியாநகரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, "ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் வரிச்சுமை அதிகரித்து வருகிறது.
இதனால் மக்களின் பணம் ஜெகன் மோகன் ரெட்டியால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவை அவர் அழித்துவிடுவார். எதிர்வரும் தேர்தலில் ஜெகனை வங்கக்கடலில் வீச ஆந்திர மக்கள் ஒவ்வொருவரும் தயாராக உள்ளார்கள்.
மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை வைத்து வாக்குக்கு ரூ.10 ஆயிரம் வரையில் அவர்கள் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த பணத்தை மக்கள் வாங்கும் பட்சத்தில், அவர்களே பள்ளம் தோண்டியதற்கு அவை சமம் ஆகும்" என்று தெரிவித்தார்.