"லேண்டர் இறங்கிய இடத்திற்கு பெயர் சிவசக்தி" இஸ்ரோ மையத்தில் பிரதமர் மோடியின் உரை!!
லேண்டர் இறங்கிய இடத்திற்கு பெயர் சிவசக்தி இஸ்ரோ மையத்தில் பிரதமர் மோடியின் உரை!!
தென் ஆப்பிரிக்கா பயணம் முடித்துவிட்டு திரும்பிய பிரதமர் மோடி அவர்கள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்று விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை தெரிவிதுள்ளார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அவர்களுக்கு நினைவு பரிசாக விக்ரம் லேண்டரின் மாதிரி பரிசாக வழங்கப்பட்டது. இதனை அடுத்து பேசிய பிரதமர் மோடி நமது விஞ்ஞானிகளை பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது.
நாம் இந்திய நாட்டின் கௌரவத்தை நிலவில் நிலைநாட்டி இருக்கின்றோம். இதுவரை யாரும் செய்திடாத விஷயத்தை நாம் செய்து காட்டி இருக்கிறோம். இதுதான் புதிய இந்தியா.
இந்தத் திட்டத்தின் வெற்றியின் மூலம் எனது மனமும் உடலும் பூரிப்பு அடைந்துள்ளது. விஞ்ஞானிகளின் தைரியத்திற்காகவும், முயற்சிக்காகவும், உழைப்பிற்காகவும் எனது சல்யூட் என்று கூறியுள்ளார்.
மேலும் சந்திராயன் 2 லேண்டர் நிலவில் இறங்கிய இடத்திற்கு திரங்கா (மூவர்ணக் கொடி) என்று பெயர் சூட்டப்படும். ஆகஸ்ட் 23ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும்.
சந்திராயன் 3 லேண்டெர் நிலவில் இறங்கிய இடத்தை சிவசக்தி என்று அழைப்போம். இந்த இடம் வரும் தலைமுறையினருக்கு இலக்கையும், உத்வேகத்தையும் அளிக்கும் என்று கூறியுள்ளார்.