மதுபோதையில் வகுப்பறையில் மட்டையான ஆசிரியர்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை.!
மதுபோதையில் வகுப்பறையில் மட்டையான ஆசிரியர்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை.!
குடிபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த ஆசிரியர் வகுப்பறையில் மட்டையான நிலையில், புகைப்படம் வெளியாகி சர்ச்சையானதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஷ்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் தினேஷ் குமார் லட்சுமே.
இவர் கடந்த மார்ச் 10 ஆம் தேதி மதுபோதையில் பள்ளிக்கு வந்துள்ளார். தள்ளாடிய போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர், வகுப்பறையில் இருந்த மாணவர்களை கிரிக்கெட் மட்டையால் அடித்துள்ளார்.
ஒருகட்டத்தில் போதையில் இருந்த ஆசிரியர், பள்ளி வகுப்பறையிலேயே மட்டையாகியுள்ளார். இதனைகவனித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பவத்தை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.
இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பான தகவல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை கவனத்திற்கு செல்லவே, நேற்று ஆசிரியர் மீதான துறை ரீதியான விசாரணை நடந்துள்ளது.
இந்த விசாரணைக்கு பின்னர், பள்ளிக்கு போதையில் வந்து மட்டையான ஆசிரியர் தினேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.