#வீடியோ: அந்தரத்தில் உற்சாக நடனம்.. புதுமண ஜோடிகள் நினைத்துப்பார்க்காத பகீர் சம்பவம்.. என்ன நடந்தது தெரியுமா?..!
#வீடியோ: அந்தரத்தில் உற்சாக நடனம்.. புதுமண ஜோடிகள் நினைத்துப்பார்க்காத பகீர் சம்பவம்.. என்ன நடந்தது தெரியுமா?..!
திருமண ஜோடிகள் உற்சாகமாக திரைப்பட பாணியில் நடனமாட, அந்தரத்தில் தொங்கிய ஊஞ்சல் திடீரென விபத்தை சந்தித்து, மணமக்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
திருமணம் என்பது மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நாளாக அமைந்துவிடும். இன்றுள்ள காலங்களுக்கு ஏற்றாற்போல, அதனை பல சுவாரஷியத்துடன் கொண்டாடி வருகின்றனர். சில மகிழ்ச்சியான தருணங்கள் விபத்தில் முடிந்த பகீர் நிகழ்வும் நடந்துகொண்டு தான் இருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் பகுதியை சார்ந்த ஜோடி, தங்களின் திருமண நிகழ்ச்சியில் மேடைக்கு மேலே 12 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட வட்ட வடிவிலான ஊஞ்சலில் நின்று நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர். ஊஞ்சலை சுற்றிலும் பட்டாசுகள் வெடிக்க, மேடைக்கு கீழ நடனக்கலைஞர்கள் நடனமாடி, திருமண ஜோடிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக திடீரென ஊஞ்சல் முறிந்துள்ளது. இதனால் திருமண ஜோடி 12 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துவிட, இதனைக்கண்டு அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் மணமகன், மணமகளுக்கு லேசான காயம் ஏற்பட்டன. இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.