கொரோனா: சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் தப்பி ஓட்டம்! நாக்பூரில் பதட்டம்
Cirono suspects escaped at nagpur
சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவின் ஒருசில இடங்களில் பரவ துவங்கியுள்ளது.
கேரளா, ஹரியானா, மகராஷ்டிரா, உத்திர பிரதேசம், டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான், லடாக், தமிழ்நாடு, தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சேர்த்து இதுவரை இந்தியாவில் 83 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் இதுவரை 2 உயிரிழப்பும் 10 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சந்தேகப்படும்படியான அறிகுறிகளுடன் இருப்பவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு நாக்பூர் மாயோ மருத்துவமனையில் 5 பேர் சந்துகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் 5 பேரும் தற்போது தப்பி சென்றுவிட்டதாக நாக்பூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு ரத்த மாதிரிகளின் மூலம் கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற 4 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லையாம்.