பிரதமர் நரேந்திர மோடியின் தாயாருக்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலின் அஞ்சலி...
பிரதமர் நரேந்திர மோடியின் தாயாருக்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலின் அஞ்சலி...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
ஹீராபென் மோடியின் இறப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு தனி விமானம் மூலம் அகமதாபாத் சென்று இறந்த பிரதமர் நரேந்திர மோடியின் தாயாருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார்.