காஃபி டே நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்! அவர் யார், இதற்கு முன்னர் என்ன செய்தார் தெரியுமா?
Coffee day appointed new chairman SV Ranganath
உலகளவில் மிகவும் பிரபலமான நிறுவனமான கபே காபி டே நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான சித்தார்த்தா தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். முன்னாள் கர்நாடக மாநிலத்தின் முதல்வர் SM கிரிஷாவின் மருமகன்தான் இந்த சித்தார்த்தா.
இரண்டு நாட்களுக்கு முன்பு நேத்ரா ஆற்றின் அருகே காரில் வந்த சித்தார்த்தா தனது ஓட்டுனரிடம் காரை நிறுத்த சொல்லி இறங்கியுள்ளார். அதன்பின்னர் மாயமான சித்தார்த்தா இன்று காலை நேத்ரா நதி கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்ட இந்த நிறுவனத்திற்கு இடைக்கால தலைவரை நியமித்துள்ளது அந்த நிறுவனம். அதன்படி, இந்நிறுவனத்தின் இடைக்கால தலைவராக எஸ்.வி.ரங்கநாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.