காஷ்மீரில் இடிந்து விழுந்த பாலம்.... இரண்டு லாரிகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ...!
காஷ்மீரில் இடிந்து விழுந்த பாலம்.... இரண்டு லாரிகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ...!
கனரக லாரிகள் பாலத்தில் சென்றபோது பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்தது. இதில் பாலத்தில் சென்ற லாரிகள் ஆற்றில் விழுந்தன.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் படோரா ஆற்றில் பாலம் உள்ள பாலமானது, மாகூர் மற்றும் ஜாஸ்ஸானா பகுதிகளை இணைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த பாலத்தின் மீது இரண்டு கனரக லாரிகள் சரக்கு ஏற்றிக்கொண்டு சென்றது.
அப்போது பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து பாலத்தின் மீது சரக்கு ஏற்றி சென்ற லாரிகள் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் இரண்டு லாரிகளின் ஓட்டுநர்களும் காயமடைந்தனர்.
ஓட்டுநர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.