நடுரோட்டில் மின்கம்பத்தில் கட்டிவைத்து,மாணவரை சராமாரியாக தாக்கிய மர்மகும்பல்.! காரணத்தை கேட்டா ஷாக்காகிருவீங்க!!
college student attacked by unknown people
காஷ்மீரை சேர்ந்தவர் மிர்ஃபியாஸ். இவர் ராஜஸ்தான் ஆல்வாரில் உள்ள கல்லூரி ஒன்றில் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகேயுள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு நீம்ரானா மார்க்கெட்டுக்கு சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது அங்குவந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சரமாரியாக அடித்து தாக்கி அவரை பெண்கள் உடையை அணியுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு மிர்ஃபியாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மேலும் 12 பேர் கொண்டு மிர்ஃபியாஸ்ஸை கடுமையாக அடித்துளனர். மேலும் அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதனை கண்ட சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தநிலையில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது
இதனைதொடர்ந்து போலிசார் இந்த சம்பவம் தொடர்பாக 12 முதல் 20 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.