தோல்வியை தாங்க முடியாமல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் உயிரிழப்பு! வாக்கு எண்ணிக்கை மையத்திலே ஏற்பட்ட மாரடைப்பு!
congress district leader dead bue to heart attack
நடந்து முடிந்த நாடாளுமனற தேர்தலில் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி 352 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் தண்டித்து 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள மொத்தம் 29 தொகுதிகளில் 28 இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதே சோரே மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ரத்தன் சிங்க் தாகூர் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ரத்தன் சிங்க் போபால் பாராளுமன்ற தொகுதியின் ஒரு வாங்கு எண்ணிக்கை மையத்தில் காங்கிரஸ் சார்பாக கலந்துகொண்டார்.
வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும்போது ரத்தன் சிங்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை அருகில் இருந்த அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். அனால் சிகிச்சை பலனின்றி ரத்தன் சிங்க் உயிரிழந்தார்.
போபால் தொகுதியில் பாஜகவை சேர்ந்த பிரகியசிங்க் தாகூர் தன்னை எதிர்த்து போட்டியிட காங்கிரசின் திக்விஜய் சிங்கை விட 3.5 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றிபெற்றார்.