காங்கிரஸ் தலைமை பி.கேவுடன் ஆலோசனை.. முக்கிய புள்ளிகள் பங்கேற்பு.!
காங்கிரஸ் தலைமை பி.கேவுடன் ஆலோசனை.. முக்கிய புள்ளிகள் பங்கேற்பு.!
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான அம்பிகா சோனி, திக்விஜய் சிங், மல்லிகார்ஜுனா கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் சோனியா காந்தியின் இல்லத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர்.
இவர்களுடன் ராகுல் காந்தி மற்றும் கே.சி வேணுகோபால் ஆகியோரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். மேலும், தேர்தல் வியூக வகுப்பாளர் என்று கருதப்படும் பிரசாந்த் கிஷோரும் சோனியா காந்தியை சந்திக்க வந்துள்ளார்.
இதனால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு தேவையான ஆலோசனைகளை காங்கிரஸ் தலைமை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.