காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்.. பாஜகவுக்கு அதிர்ச்சி.!
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்.. பாஜகவுக்கு அதிர்ச்சி.!
2024 மக்களவை தேர்தலுக்கான வகுப்பதிவுகள் அனைத்தும் நிறைவுபெற்று, நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் காத்திருக்கின்றன. இரண்டு முறை ஆட்சியை இழந்த காங்கிரஸ் - ஆட்சியில் அமர்ந்த பாஜக இடையே நேரடி அரசியல் மோதல் ஏற்பட்டது. இத்தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக வெற்றி அடையும் என பெரும்பாலான நிறுவனங்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் கூட்டணி வெற்றி என தேசபந்து நாளிதழ் ஆய்வில் தகவல்
இந்நிலையில், இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைக்கும் என தேசபந்து நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்தித்த நிலையில், இந்தியா கூட்டணிக்கு 255 முதல் 290 தொகுதிகள் வரை கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அடிமேல் அடி.. காங்கிரசுக்கு இந்த மாநிலத்தில் வெற்றிவாய்ப்பே இல்லையாம் - கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்.!
அதேபோல, பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 270 முதல் 241 தொகுதிகள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தை பொருத்தவரையில் பாஜக கூட்டணி 48 இடங்களையும், இந்தியா கூட்டணி 34 இடங்களையும் கைப்பற்றலாம். மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி 20 முதல் 30 இடங்களை கைப்பற்றும் எனவும், பாஜகவுக்கு 20 இடங்கள் கிடைக்கும் எனவும், கர்நாடக மாநிலத்தில் பாஜக கூட்டணி 10 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களையும் கைப்பற்றும் எனவும் கூறப்படுகிறது. 42 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், பாஜக 11 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மாதாமாதம் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.8,5௦௦.. வெளியான முக்கிய அறிவிப்பு.!