விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு!..ஆத்திரத்தில் காவல் நிலையத்தை கொளுத்திய குடும்பத்தினர்..!
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு!..ஆத்திரத்தில் காவல் நிலையத்தை கொளுத்திய குடும்பத்தினர்..!
அசாமில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு தீ வைத்து கொளுத்தியதால் பதட்டம் ஏற்பட்டது.
அசாம் மாநிலத்தில் உள்ள நகோன் மாவட்டத்தில் விசாரணைக்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் காவல் நிலையத்திற்கு தீ வைத்து கொளுத்தினர். காவல் நிலையத்திற்கு வைக்கப்பட்ட தீயில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது சபிகுல் இஸ்லாம் என்ற நபர் தனது தொழில் நிமித்தமாக சிவசாகர் மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டு இருந்தார், அப்போது அவரை வழிமறித்த காவல்துறையினர் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சபிகுல் இஸ்லாம் கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த காவல்துறையினர் சபஇகுல் இஸ்லாமை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்த சபிகுல் இஸ்லாமின் மனைவி காவல் நிலையம் வந்தபோது அவரின் கனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூரியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சபிகுல் இஸ்லாமின் மனைவி குடும்பத்தினருடன் மருத்துவமனைக்கு சென்றபோது, சபிகுல் இஸ்லாம் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த சபிகுல் இஸ்லாமின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டதாகவும், அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.