இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமானதாக மாறி வருகிறது.! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!
நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அசுர வேகம் எ
நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அசுர வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு மோசத்தில் இருந்து படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் புதிதாக 56,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு ஒரு கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் மிக தீவிரமான செயல்பாட்டில் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக நிலைமை மோசமான நிலையில் இருந்து மிக மோசமான நிலைக்கு மாறிவிட்டது. மருத்துவமனைகளும், அவசர சிகிச்சை பிரிவுகளும் தயார் செய்யப்படவேண்டும் என கூறினார்.
இந்தநிலையில், நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரிப்பது, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை பரிசோதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் சுமார் 10,000 ஆக இருந்த இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 60,000 ஐ தாண்டி உள்ளது. எனவே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி, மனித உயிர்களை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.