மகிழ்ச்சியான செய்தி.! இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது.
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 75,282,798 பேர் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 99,79,447 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 95,20,827 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 338 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.