10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு.. ஆனால் எப்போது கிடைக்கும் தெரியுமா?
corona vaccine will be provide 10 crore people
இந்தியாவில் கொரோன வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு மிகவும் அவஸ்தை பட்டு வருகின்றனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும், மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்ப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுப்பிடித்ததாகவும், அந்த மருந்தை 1077 பேருக்கு செலுத்தியதில் அத்தனை பேருக்கும் கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்ததால் சோதனை வெற்றி அடைந்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அதனையடுத்து மத்திய அரசிடம் இந்தியாவின் புனேவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் சீரம் இன்ஸ்டிடியூட் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்கள் மீது 2 மற்றும் 3-ஆம் கட்ட பரிசோதனை செய்ய அனுமதி வழங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிற்கு பரிந்துரை செய்தது.
இந்த சோதனை வெற்றி பெரும் பட்சத்தில் இந்த மருந்தை கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனம் திட்டமிட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி 3 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.225)கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசியானது வரும் 2021 -ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வசிக்கும் பத்து கோடி பேருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.