சமூக விலகலை பின்பற்றாமல் கூட்டமாக சீட்டு, தாயம் விளையாடியதால் ஏற்பட்ட விபரீதம்! ஆந்திராவில் பரபரப்பு
corono attacked people playing cards and thayam at andra
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் சமூக விலகலை பின்பற்றாமல் கூட்டமாக சேர்ந்து சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் வீட்டில் எத்தனை நாட்கள் தான் சும்மாவே இருக்க முடியும் என்பதால் ஒருசிலர் கூட்டமாக சேர்ந்து தாயம், சீட்டு போன்ற விளையாட்டுகளை விளையாடி பொழுதை போக்குகின்றனர். இவ்வாறு பொழுதை போக்க ஆந்திராவில் சீட்டு மற்றும் தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் டிரக் டிரைவர் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாடியுள்ளார். அருகிலேயே சில பெண்கள் தாயம் விளையாடியுள்ளனர். தற்போது அந்த டிரைவர் மூலம் அங்கு விளையாடிய 24 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.
அதேபோல் அதே ஆந்திர மாநிலத்தின் மற்றொரு பகுதியான கர்மிகா நகரிலும் ஒரு டிரக் டிரைவருடன் சீட்டு விளையாடிய 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இங்கே வைரஸ் பரவ அந்த டிரைவர் தான் காரணமாக இருந்துள்ளார்.