நடமாடும் வேனில் கொரோனா பரிசோதனை; குஜராத் அரசு அசத்தல்!
Corono testing in mobile test van at Gujarat
குஜராத்தில் நடமாடும் வேனில் கொரோனா பரிசோதனைக்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸால் 17 லட்சத்திற்கும் மேல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 25 லட்சத்திற்கும் மோலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொரோனா வைரஸ் தொற்றின் சோதனை முடிவுகள் வெளிவர ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் ஆகின. தற்போது ரேபிட் டெஸ்ட் மூலம் முடிவுகள் மிக விரைவில் கிடைக்கிறது.
இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் கொரோனா மொபைல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பலருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே ஒவ்வொரு கிராமம் மற்றும் தாலுகா வாரியாக பரிசோதனையை அதிகரிக்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நடமாடும் பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு வேனின் உட்புறத்தில் கொரோனா பரிசோதனைக்கான ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. வேனின் உள்ளே இருந்தவாறு மக்களிடம் இருந்து சோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்படுகிறது. தற்போது இந்த வாகனம் அகமதாபாத்தில் உள்ளது.