"பெண்ணின் விருப்பம் போதும்" - இரயில் பெட்டியில் இளம் காதல் ஜோடி திருமணம்; வாழ்த்துக்களை குவித்த பயணிகள்.!
பெண்ணின் விருப்பம் போதும் - இரயில் பெட்டியில் இளம் காதல் ஜோடி திருமணம்; வாழ்த்துக்களை குவித்த பயணிகள்.!
தனிமனிதனின் வாழ்க்கையில் காதல் மற்றும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் 20 முதல் 30 ஆண்டுகளை பெற்றோருடன் நகர்த்தி, எஞ்சியுள்ள வாழ்நாட்களை இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம் என சகல விதமான சூழ்நிலைகளிலும் பயணிக்க திருமண பந்தம் வாழ்க்கையின் இரண்டாவது முக்கிய அடியை எடுத்துவைக்க உதவுகிறது.
இன்றளவில் திருமணங்கள் என்பது ஆடம்பரம் மிகுந்துவிட்டது. தங்களிடம் பணம் இருப்பவர்கள் ஊர்மெச்ச திருமணம் நடத்தி அந்தஸ்தை காண்பிக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் அதுபோன்ற திருமணங்களை, தங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து நடத்துகிறது.
ஆனால், இவற்றுக்கு மாற்றாக காதல் திருமணம் என்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மனத்தால் இணைந்த ஜோடிகள், கோவில்களில் மாலை மாற்றி, பரம்பரியபடி தாலிகட்டி திருமணம் செய்து தங்களின் வாழ்க்கையை தொடங்குகிறது. இந்நிலையில், இரயிலில் பயணித்த காதல் ஜோடி, பயணிகள் முன்பு எளிமையாக தங்களின் திருமணத்தை முடித்துக்கொண்டது. பயணிகள் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.