ஊரடங்கு உத்தரவு! வீட்டில் இருந்தபடியே வீடியோ காலில் நடைபெற்ற திருமணம்!
Couples got marriage in videocall while lockdown
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 190 க்கு மேற்பட்ட உலகநாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் இதுவரையில் 4000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தவிர்க்க ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மிக முக்கியமான அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது எனவும், வீட்டின் உள்ளே இருந்தாலும் சமூக விலகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் பேருந்துகள், ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் இதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த திருமணம் போன்ற பல நிகழ்ச்சிகளும் தடைசெய்யப்பட்டது.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த வணிக கடற்படை அதிகாரியான ப்ரீத் சிங் என்பவருக்கும் நீத் கவுர் என்ற டெல்லியை சேர்ந்த பெண்ணிற்கும் தங்கள் வீட்டிலிருந்தபடியே, பெரியோர்கள் முன்னிலையில் வீடியோ கால் மூலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.