பணியின்போதே சோகம்.. கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்..!
பணியின்போதே சோகம்.. கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்..!
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், கச்சிப்பெருமாநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் கோபால கிருஷ்ணன். இவரின் மகன் ரமேஷ் (வயது 35), கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ரமேஷின் மனைவி வசந்தி. தம்பதிகளுக்கு மணிகண்டன் (வயது 17), ரகு (வயது 15) என 2 மகன்கள் இருக்கின்றனர்.
ரமேஷ் நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார், விருத்தாச்சலம், பெரியார் நகரில் இருக்கும் வீட்டில் கட்டிட பணியில் அவர் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அச்சமயம், திடீரென அவர் பணியின்போதே மயங்கி விழுந்தார்.
இதையும் படிங்க: 10 ரூபாய் ஜூஸ் குடித்து படுத்த படுக்கையாக சிறுவன்; கடலூரில் பேரதிர்ச்சி.. அலட்சியத்தில் அதிகாரிகள்?.! தாய் குமுறல்.!
மயங்கி விழுந்தவர் மரணம்
இதனைக்கண்டு அதிர்ந்துபோன தொழிலாளர்கள், அவரை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு ரமேஷ் மாலை சுமார் 6 மணியளவில் உயிரிழந்தார்.
மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்
ரமேஷ் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டபோது, செவிலியர்கள் மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது. மருத்துவர் உரிய சிகிச்சை அளித்திருந்தால், அவரின் மரணம் நிகழ்ந்திருக்காது என கூறிய உறவினர்கள், திடீரென மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து வந்த விருத்தாச்சலம் காவல்துறையினர், போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன்பேரில் போராட்டக்குழு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றது.
இதையும் படிங்க: அடையாளம் தெரியாத வாகனம் மோதி சோகம்; இளைஞர் பரிதாப பலி.!