தந்தை வீடியோ வெளியிட்டு தற்கொலை! மகள்கள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை! அதிர்ச்சி காரணம்!
dad and daughters suicide

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்த எலக்ட்ரிகல் காண்ட்ராக்டர் பாபு ரெட்டி. அவருடைய மகள்கள் ஸ்வேதா (26) , சாயி(20). ஸ்வேதாவிற்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் சாயி இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
இரண்டு மகள்களையும் பாபுரெட்டி பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் ஸ்வேதா வாழ்க்கையில் துயரம் ஆரம்பித்தது. அவருடைய கணவன் சுரேஷ் குமார் ஸ்வேதாவை தினமும் அடித்து துன்புறுத்தி கொடுமை படுத்தி வந்துள்ளார்.
மகள் தினம் தினம் கஷ்டப்படுவதை பார்த்த பாபு ரெட்டி கடைசியில் தன் உயிரை விடுவதென தீர்மானித்து, தன் மரணத்திற்கு காரணம் மருமகன் சுரேஷ்குமார் தான் என கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தன் வீட்டுக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தந்தையின் மரண செய்தியை கேட்டு மகள்கள் இருவரும் பதறி துடித்தனர். தங்கள் மீது தந்தை வைத்திருந்த பாசத்தால் தான் இந்த நிலை என்பதை அறிந்த 2 பேரும் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். 3 பேரின் சடலங்களையும் மீட்ட போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சுரேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.