பட்டப்பகலில் துணிகரம்.. பள்ளி ஆசிரியரை கடத்திய மர்ம கும்பல்.. போலீஸ் வலைவீச்சு..!
பட்டப்பகலில் துணிகரம்.. பள்ளி ஆசிரியரை கடத்திய மர்ம கும்பல்.. போலீஸ் வலைவீச்சு..!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 23 வயது மதிக்கத்தக்க அர்பிதா என்ற இளம்பெண் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அர்பிதாவை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் காரானது அவரை அங்கிருந்து கடத்திக் கொண்டு தப்பி சென்றது. இந்த நிகழ்வுகள்யாவும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அர்பிதா உறவுக்காரரான ராமு என்பவரை காதலித்து வருவதாகவும் அவர் தான் தன் மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்றும் அரபிதாவின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் கனகதாசா ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் அர்பிதா ஏன் பள்ளிக்கு சென்றார் என்ற கேள்வியும் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.