திருமணமான 10 மாதத்திலேயே கணவனை இழந்த வீரப்பெண்மணி எடுத்த அதிரடி சபதம்! வெளியான நெகிழ்ச்சி சம்பவம்!
deaad army man wife became army officer
டெல்லியில் நடந்த புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 துணை இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிகழ்வு யாராலும் மறக்கமுடியாத வேதனைக்குரிய சம்பந்தமாக இருந்தது. இந்நிலையில் டேராடூனை சேர்ந்தவர் இராணுவ வீரர் சங்கர் தோண்டி. இவருக்கு காஷ்மீரை சேர்ந்த நிகிதா கவுல் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர்களுக்கு திருமணமாகி பத்து மாதங்களே ஆனநிலையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சங்கர் வீரமரணம் அடைந்தார்.
இந்நிலையில் தன்னுடைய கணவரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்த நிகிதா, நீங்கள் தேசத்தை தான் அதிகம் நேசித்தீர்கள். உங்களை எண்ணும்போது மிகவும் பெருமையாக உள்ளது. சந்திக்காத மக்களுக்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளீர்கள். நீங்கள் எனது கணவராக அமைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறி கதறி அழுதுள்ளார்.
இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்நிலையில் தனது கணவர் பணியை நான் தொடருவேன் என்று சபதம் ஏற்றஅவர் இராணுவத்தில் சேருவதற்கு முடிவுசெய்தார். அதனைத் தொடர்ந்து குறுகிய கால திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிவெற்றி பெற்றுள்ளார். பின்னர் சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் ட்ரைனிங் அகாடமியில் இணைந்து ஒருஆண்டு பயிற்சி பெற உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் நான் ராணுவத்தில் சேர்வதற்காக கடுமையாக உழைத்தேன்.இனி ஒரு ஆண்டு மேற்கொள்ள உள்ள பயிற்சியிலும் கண்டிப்பாக சிறந்துவிளங்குவேன். என் கணவரின் ஆன்மாவும் பெருமைப்படும் என கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.