அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் செத்து கிடந்த எலி! உணவை சாப்பிட்ட மாணவர்களின் நிலை என்ன?
dead rat in government noon meal
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் அமைத்துள்ள அரசு பள்ளி மாணவர்களை ஹபூரைச் சேர்ந்த ஜன்கல்யான் சன்ஸ்தா கமிட்டி என்ற அரசுசாரா தொண்டு நிறுவன அமைப்பால் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு இன்று மதியமும் மாணவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது. அப்பொழுது மதிய உணவை வாங்கிய மாணவர்கள் சாதத்தை எடுத்த போது அதில் கீழே இறந்தநிலையில் எலி ஒன்று கிடந்துள்ளது. அதனை கண்டமாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த உணவை சாப்பிட்டு ஆசிரியர் மற்றும் 9 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து முசாபர் நகர் மாவட்ட ஆட்சியர், உணவு விநியோகித்த அமைப்பின் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில், சில நாட்களுக்கு முன், அரசுப் பள்ளி ஒன்றில் மதிய உணவுத் திட்டத்தில் கீழ் ஒரு லிட்டர் பாலில், நிறைய தண்ணீர் ஊற்றி, சுமார் 81 மாணவர்களுக்குக் கொடுத்துள்ளனர்.