அதிகாலையில் கேட்ட மரண ஓலம்..50க்கும் மேற்பட்ட பக்தர்களோடு ஏரியில் பாய்ந்த பேருந்து.. கர்நாடகாவில் பரபரப்பு.!
அதிகாலையில் கேட்ட மரண ஓலம்..50க்கும் மேற்பட்ட பக்தர்களோடு ஏரியில் பாய்ந்த பேருந்து.. கர்நாடகாவில் பரபரப்பு.!
கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்த ஆனேக்கல் தாலுக்கா பகுதியில் பிடாரகுப்பே ஏரிக்கரை ஒன்று உள்ளது. இந்த பகுதியில் அதிகாலையில் பக்தர்களுடன் சென்ற பேருந்தானது ஏரியின் தடுப்பு சுவரில் மோதி ஏரிக்குள் பாய்ந்து கவிழ்ந்தது.
இந்நிலையில் ஏரிக்குள் பாய்ந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து பேருந்தானது ஏரியில் கவிழ்ந்ததில் பக்தர்கள் அலறி சத்தம் போட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களின் அலரல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அப்பகுதி மக்கள் பேருந்தின் மீது ஏறி போராடிக் கொண்டிருந்தவர்களை பத்திரமாக நீட்டனர்.
மேலும் இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்களையும் மீட்ட பொதுமக்கள் அருகில் இருந்து ஆக்ஸ்போர்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனையடுத்து இந்த சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த அத்திப்பெலே போலீசார் ஏரியில் கவிழ்ந்த பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தானது ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. மேலும் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது.