முதல்வரின் மகள் கடத்தலா? அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலால் பெரும் பரபரப்பு.!
delhi chifminister - aravind kajarival daughter kidnaf
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளை கடத்தப்போவதாக வந்த மின்னஞ்சலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய வருவாய்த்துறைப் பணியில் (IRS) சேர்ந்து தில்லியில் வருமானவரி ஆணையர் அலுவலகத்தில் பணி புரிந்தவர் கெஜ்ரிவால். பிறகு அரசு பணியை துறந்து அரசியல் கட்சியை தொடங்கிய அவர் குறுகிய காலத்திலேயே தேர்தலில் வெற்றி பெற்று தற்போது டெல்லி முதல்வராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி அவருடைய அலுவலகத்திற்கு மெயில் ஒன்று வந்துள்ளது. அதில் உங்களது மகள் ஹர்ஷிதாவை கடத்த போகிறோம் அவரை காப்பாற்ற என்ன செய்யப் போகிறீர்கள் என்று அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டெல்லி போலீசார் ஹர்ஷிதாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர். அந்த மெயிலை யார்? எங்கிருந்து அனுப்பியது என்பது தொடர்பாக டெல்லி சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.