×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாக்லேட்டுடன் கவரையும் சாப்பிட்ட சிறுமி: மூச்சுக்குழாயில் சிக்கி துடித்த பிஞ்சு.. பெற்றோர்களே கவனம்.!

சாக்லேட்டுடன் கவரையும் சாப்பிட்ட சிறுமி: மூச்சுக்குழாயில் சிக்கி துடித்த பிஞ்சு.. பெற்றோர்களே கவனம்.!

Advertisement


டெல்லியை சார்ந்த பெண்மணி அன்ஷுள் சோழங்கி. இவரின் 8 வயது மகள் பாரி. கடந்த சில நாட்களாகவே சிறுமி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளார். முதலில் சீசன் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டு இருக்கலாம் என்று பெற்றோர் எண்ணியுள்ளனர். அதற்கான சிகிச்சை பெற்றும் பலன் இல்லை. 

உடல்நிலை தொடர்ந்து மோசமானதால், சிறுமியின் நிலையை கண்டு பதறிப்போன பெற்றோர்கள், அங்குள்ள ஆகாஷ் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். 

அங்கு நடந்த பரிசோதனையில், சிறுமியின் மேல் மூச்சுக்குழாயில் சாக்லேட் கவர் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள்  Bronchoscopy முறையில் சாக்லேட் கவரை இரண்டு திட்டங்களை செயல்படுத்தி வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். 

தொடர்ந்து சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் உடல்நலம் முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைக்கு சாக்லேட் கொடுத்தபோது, அவர் தவறுதலாக கவரையும் சேர்த்து சாப்பிட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chocolate #Chocolate Wrapper #delhi #girl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story