பத்திரிகையாளரிடம் அப்பாச்சி பைக்கில் வந்து செல்போன் பறித்த சிறுவன்; அதிர்ச்சி வீடியோ வைரல்..!!
பத்திரிகையாளரிடம் அப்பாச்சி பைக்கில் வந்து செல்போன் பறித்த சிறுவன்; அதிர்ச்சி வீடியோ வைரல்..!!
புதுடெல்லியை சேர்ந்த தனியார் நிறுவன பத்திரிகையாளர் மானவ் யாதவ். இவர் சம்பவத்தன்று டெல்லி மகாராஷ்டிரா சதன் - இந்தியா கேட் அருகே செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, அவருடன் சென்ற கேமரா குழு சாலையின் எதிர்புறம் கேமராவை ஆன் செய்து காத்திருந்தது. எதிர்திசையில் யாதவ் நின்றுகொண்டு இருந்தார்.
இவரை நோட்டமிட்டவாறு அப்பாச்சி பைக்கில் வந்த சிறுவன், சற்றும் எதிர்பாராத விதமாக பத்திரிகையாளரின் செல்போனை பறித்து சென்றுள்ளான்.
இதனையடுத்து, சுதாரிப்புடன் செயல்பட்ட பிற பணியாளர்கள் விரைந்து சிறுவனை பிடித்து செல்போனை மீட்டனர். இந்த சம்பவம் கடந்த ஜூன் 15ம் தேதி நடைபெற்றது.
இதுகுறித்த தகவலை தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள பத்திரிகையாளர், டெல்லியில் இருப்போர் தங்களின் உடமைகளை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.