டெல்லி புதிய மதுபானக்கொள்கை ஊழல் விவகாரம்: ஆம் ஆத்மீ எம்.பி அதிரடி கைது.!
டெல்லி புதிய மதுபானக்கொள்கை ஊழல் விவகாரம்: ஆம் ஆத்மீ எம்.பி அதிரடி கைது.!
டெல்லியில் கடந்த 2021 நவம்பர் மாதம், ஆம் ஆத்மீ கட்சியின் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ர்வால், புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தார். அதன்படி, சில்லறை வியாபாரத்தில் மதுபான விற்பனை செய்வதை டெல்லி அரசு நிறுத்திக் கொண்ட நிலையில், விற்பனையாளர்களை ஈடுபட அனுமதித்து. இதனால் அரசுக்கு வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 2022-ல் டெல்லி தலைமைச் செயலாளர், புதிய மதுபான கொள்கை மூலமாக கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நிலையில், அவரது பரிந்துரையின் பேரில் டெல்லி துணை ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
சிபிஐ விசாரணை நடந்த நிலையில், தீவிர விசாரணைக்கு பின்னர் டெல்லி துணை முதல்வர் மணி சிசோடியா கைது செய்யப்பட்டார். நேற்று டெல்லி மதுபான கொள்கை தொடர்பான விசாரணையுடன், பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மீ கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் இல்லத்தில் சோதனை நடைபெற்றது.
சோதனையின் முடிவில் சஞ்சய் கைது செய்யப்பட்டார். அவரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவுக்கு எதிரான கோஷங்களை முன்வைத்த நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. சஞ்சய் சிங் தற்போது அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.