புகைபிடித்ததை கண்டித்த மருத்துவமனை பெண் ஊழியரை தாக்கிய வங்கி அதிகாரி.. ஷேர் ஆட்டோ பயணத்தில் சம்பவம்.!
புகைபிடித்ததை கண்டித்த மருத்துவமனை பெண் ஊழியரை தாக்கிய வங்கி அதிகாரி.. ஷேர் ஆட்டோ பயணத்தில் சம்பவம்.!
தனியார் வங்கி உயர் அதிகாரி ஆட்டோவில் புகைபிடித்தபடி வந்த நிலையில், தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் அதனை தட்டிக்கேட்டதால், அவரை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் சுமன் லதா (வயது 42). இவர் ஷேர் ஆட்டோவில் ஏறி பயணித்த நிலையில், ஆட்டோ க்ரீன்வுட் சிட்டி அருகே வந்துள்ளது.
அப்போது, ஆட்டோவில் ஏறிய தம்பதியில், வசு சிங் என்பவர் புகைபிடித்தபடி வந்துள்ளார். இதனைகவனித்த சுமன் லதா, சிகிரெட்டை வெளியே தூக்கி வீசுமாறு தெரிவித்துள்ளார். வசு சிங் தனியார் வங்கியில் உயரதிகாரியாக பணியாற்றி வருவதால், ஆணவத்தில் முடியாது என கூறியுள்ளார்.
இதனையடுத்து, சுமன் லதா சிகிரெட்டை பிடுங்கி வீசியெறியவே, கோபமடைந்த வசு சிங் பெண்ணை தாக்கியுள்ளார். இதனால் அவரின் மூக்கில் இருந்து இரத்தம் வந்துவிட, ஆட்டோவை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார்.
ஆட்டோவில் இருந்து இறங்கிய பெண்மணி காவல் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வசு சிங்கை கைது செய்து, சொந்த ஜாமினில் உடனடியாக விடுத்துள்ளனர்.