×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் நகரங்களில்.. முதலிடம் பிடித்துள்ளது டெல்லி; 2-வது இடத்தில் மும்பை..!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் நகரங்களில்.. முதலிடம் பிடித்துள்ளது டெல்லி; 2-வது இடத்தில் மும்பை..!

Advertisement

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக டெல்லி முதல் இடத்திலும்,  மும்பை இரண்டாவது இடத்திலும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு மிகவும் இல்லாத நகரம் தலைநகரான டெல்லி என்று தேசிய குற்ற ஆவண பிரிவு தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 13 ஆயிரத்து 892 பதிவாகியுள்ளன. 

இது அதற்கு முந்தையவருடத்துடன் ஒப்பிடும்போது 40 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள 19 பெருநகரங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லியின் பங்கு மட்டும் 32.20 சதவீதம் உள்ளது. கடந்த வருடத்தில் டெல்லியில் தினசரி இரண்டு சிறுமிகள் வீதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். 

தலைநகரில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடத்தல், கணவரின் கொடுமை, சிறுமி பாலியல் பலாத்காரம் ஆகியவை அதிக அளவில் இடம் பிடித்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் வர்த்தக தலைநகரான மும்பை இருக்கிறது. மூன்றாவது இடத்தில் பெங்களூரு உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #National Crime Records Bureau #Data dubs #delhi #Most unsafe Women
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story