பள்ளி வளாகத்தில் நடந்த சண்டையில் தாக்கப்பட்ட சிறுவன்; சிகிச்சை எடுக்காததால் சரிந்து விழுந்து திடீர் மரணம்..!
பள்ளி வளாகத்தில் நடந்த சண்டையில் தாக்கப்பட்ட சிறுவன்; சிகிச்சை எடுக்காததால் சரிந்து விழுந்து திடீர் மரணம்..!
விபத்து ஏற்பட்டோலோ, பள்ளியில் சண்டை போன்ற நிகழ்வால் பாதிக்கப்பட்டாலோ பெற்றோரிடம் அதனை கூறினால் மட்டுமே உடல்நலன் காப்பாற்றப்படும். மாறாக பெற்றோர் திட்டுவார்கள் என பயந்தால் உயிரிழப்பு கூட நடக்கலாம்.
புதுடெல்லியில் உள்ள தனியார் பள்ளியில், 17 வயதுடைய சிறுவன் படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தன்னுடன் பயின்று வரும் மாணவர்களால் தாக்கப்பட்டு இருக்கிறார்.
இதனால் சிறுவனின் முகம் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 12ம் தேதி நடந்த இருதரப்பு வாக்குவாதத்தில், டிசம்பர் 15 அன்று 17 வயது சிறுவன் தாக்கப்பட்டு இருக்கிறார்.
சிறுவன் தனது வீட்டிற்கு சென்று தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு சுயமாக மருந்து போட்டு இருக்கிறார். இதனிடையே, நேற்று சிறுவனின் உடல்நிலை திடீரென மோசமாகியுள்ளது.
அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, சிறுவன் தனக்கு நடந்ததை கூறி இருக்கிறார். உடனடியாக மருத்துவர்கள் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து இருக்கின்றனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று இரவு 10:30 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக பஞ்சண்புரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.