கொரோனாவே இன்னும் முடியல..! அதுக்குள்ள அடுத்த பிரச்சனை ஆரம்பமாயிடுச்சு..! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.!
Dengue fever starts in Hyderabad
பல உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரசுக்கே இன்னும் ஒரு முடிவு தெரியாத நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமெடுத்துவருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் இழப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியிருந்தாலும் இதுவரை அதிகாரபூர்வமான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனாவை பொறுத்தவரை இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஹைதராபாத்தை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 1,200 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, தற்போது ஹைத்ராபாத்தில் டெங்கு காய்ச்சல் வேகமெடுத்து வருகிறது.
டெங்கு காய்ச்சலால், கடந்த மே மாதத்தில் 9 பேரும், ஜூன் மாதத்தில் 14 பேரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வாரத்தில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏழு பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
தமிழகத்திலும் வரும் காலங்களில் டெங்கு காய்ச்சல் சீசன் தொடங்க இருப்பதால் மக்கள் இப்போதில் இருந்தே தாங்கள் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது, மழை நீர் தேங்கியுள்ள பொருட்களை அப்புற படுத்துவது போன்றவை டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மை காக்க உதவும்.